வாழ்க்கைக்கான பண்பு நலன்கள் - PG OUDAYA COUMARIN
- PUNCH GURUKULAM
- Jun 25, 2021
- 8 min read

LIFE is an endless journey between Perception and Reality
You Never know which Footstep will bring A good Twist in Life.....So,
Keep on walking!!! Happiness comes when it is most unexpected.
In Life, we have a lot to lose and very little to choose. Whenever you get a chance to choose, do it wisely.
இந்த பரந்த உலகத்தில் நாம் மனிதனாக பிறக்கும் போது எதை கொண்டு வந்தோம் இதை கொண்டு போகப் போகிறோம்என்பது யாருக்கும் தெரியாத ஒரு வாழ்க்கையை நாம் ஆரம்பிக்கின்றோம் அப்படி ஆரம்பிக்கின்ற இந்த வாழ்க்கையில்ஏற்படக்கூடிய நன்மைகளும் , தீமைகளையும் சந்திக்கின்றோம்.
அந்த வகையில் அந்த நன்மைகளும் தீமைகளும் சந்திக்கும்போது ஒரு தனி மனிதனாகிய நாம் எப்படி ஒரு நல்ல பயனுள்ளநல்ல குணநலன்களையும் பண்புகளையும் நாம் பெற்று வாழ்க்கையை வழிநடத்த வேண்டும் என்பதற்கான ஒரு கருத்தை நாம்அறிந்து கொள்வது நல்லது.
LIFE
Live Living
Inspire In
Forgive Faith
Engage Every day
பண்பு நலன்கள் தான் அவரவர் வாழ்க்கையின் நோக்கத்திற்கான தூண்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . அவைதான்உங்களை அடையாளப்படுத்துகின்றது உங்கள் வெற்றியை நோக்கி வழி நடத்துகின்றது.சரியான முடிவுகள் எடுக்கவும்உதவுகிறது. உங்கள் தனித்துவம் காக்கின்றது என்று வரை ராஜா அரிச்சந்திரன் என்றால் இந்த அளவு நினைவு கூற உதவுவதுஅவர் கடைபிடித்த நேர்மை என்ற பண்புதான் . இதைதான் மகாத்மாவும் சத்திய சோதனைக்கு கடைப்பிடிக்க தூண்டியதுஎன்பது உண்மை. இதனால் அவர் சத்தியத்திற்க்கும் சகிப்புத்தன்மையிற்க்கும் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது.
பண்புநலன்கள் என்றால் என்ன ? அவை எப்படி வரிசைபடுத்தலாம்?
1. அன்பு 2. பொறுமை 3. பணிவு 4. சினம்தவிர்த்தல் 5. மன்னித்தல் 6. பாராட்டுதல் 7. நேர்மை 8. ஏற்றுக்கொள்ளுதல் 9. உற்சாகம் 10. உதவி செய்தல் கருணை 11. ஒற்றுமை.
இவையாவும் நல்ல நற்பண்புகள் ஆகும். இதை நமது வாழ்க்கை வளத்திற்கு மிகவும் உகந்த பண்புகளாகும். அய்யன்வள்ளுவன் அவர்கள் கூறும் வாழ்க்கை பண்புகள் நலன் பற்றிய கருத்துக்கள்.
அன்பு:
அன்பின் வழியது உயர் நிலை அஃதிலார்க்கு
என்பது தோல் போர்த்த உடம்பு.
உயிரோடு கூடிய உடம்பானது அன்பு வழியில் இயங்குவதாகவும் அவ்வன்பில்லாதவர்க்கு உள்ள உடம்பானது எலும்பைத்தோலால் போர்த்த வெற்று உடம்பாகும்.
பொறுமை:
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
தனக்குத் தீங்கு செய்தவனைத் திரும்பத் தீங்கு செய்தவருக்கு உண்டாகுது அவ்வொருநாள் இன்பம் மட்டுமே ஆனால்,பொறுத்துக்கொண்டு வருக்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டு.
பணிவு:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணிஅல்ல மற்றுப் பிற.
பணிய வேண்டுவோரிடத்துப் பணிவுடையனாய், அதனுடன் இனிய சொற்களை பேசவும் வல்லவனாக இருத்தல் ஒருவனுக்குஅணிகலமாகும் உடம்பிற்கு அணியும் அணிகலம் நல்ல அணியாக.
சினம் தவிர்த்தல்:
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
ஒருவன் தனக்குத் துன்பம் வராமல் இருக்க வேண்டும் என நினைத்தானாயின் யாரிடத்தும் சினம் தோன்றாமல் காத்துக்கொள்வானாக.
மன்னித்தல்:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்யைம் செய்து விடல்.
கொடுமை செய்தவரைத் தண்டிக்கும் முறையாவது செய்தவர் தாமே வெட்கப்படுமாறு அவருக்குப் பல நன்மைகளையும்செய்து பின் அத்தீமையையும் தான் செய்த நன்மையையும் மறந்து விடுதலாகும்.
நேர்மை:
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் ;
பாற்பட்டு ஒழுக்கம் பெறின்.
வேறுபாடுகளின் நடுவாக நின்று செயல்படும் ஆற்றலை ஒருவர் பெற்றிருப்பின் அதுவொன்றே . அவருக்கு நல்ல தகுதிஎனப்படும்.இங்கு வேறுபாடுகள் என்பது தன் குடும்பம்,.உறவினர், நண்பர் , பகைவர் போன்ற உறவுமுறை வேறுபாடுகளையும்ஏழை பணக்காரன் போன்ற பொருளாதார நிலை வேறுபாடுகளையும் இன்னபிற வேறுபாடுகளையும் குறிப்பதாக கொள்ளலாம் . இந்த வேறுபாடுகளின் ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல் நடுவாக நின்று செயலயற்றுவதே ஒரு நல்ல மனிதருக்கான சிறந்ததகுதி என்கிறார்.
ஏற்றுக்கொள்ளூதல்:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்;
பெருமை முயற்சி தரும்.
ஒரு வினையைச் செய்து முடித்தல் அருமை உடையது எனக்கருதி முயலாதிருத்தலைத் தவிர்த்தல் வேண்டும்.அவ் வினையைமுடித்திற்கு ஏற்ற பெருமையை முயற்சி உண்டாக்கும்.
உற்சாகம்: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார் உடையது உடையரோ மற்று. ஒருவரை உடையவர் என்று சொல்லப்படுவது ஊக்கம் உடைமை மைய , அவ்வூக்கம் இல்லாதவர், வேறு எப்பொருளைஉடையவராயினும் , உடைய வராகக் கருதப்படார்.
கருணை: கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. இரக்கம் என்று சொல்லப்படும் மிகப்பெரிய அழகு அரசனிடம் பொருந்தி இருப்பதனால் இவ்வுலகம் அழியாமல் நிலைத்திருக்கிறது.
ஒற்றுமை:
இகலென்ப எல்லா உயிர்களுக்கும் பகலென்னும்
பண்பின்னை பாரதிக்குப் நோய்.
எல்லா மக்களுக்கும் பிறரோடு சேராமை என்னும் தீக் குணத்தை வளர்க்கும் நோயினை. இகல் என்று சொல்லுவர் நூல்வல்லார்.
பாராட்டுதல்:
தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
பிறந்தால் புகழ் உண்டாகுமாறு வாழ்தல் வேண்டும் அப் புகழைப் பெற முயலாதவர் மக்களாகப் பிறப்பதினும் பிறவா திருத்தல்நல்லது.
உதவிசெய்தல்:
உதவி வரைத்தன்று உதவி; உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.
முன்னே செய்த உதவியின் அளவினை உடையதன்று பின்னே செய்யும் மாற்றுதவி; அவ்வுதவி செய்யப்பட்டவரின் மனஅளவினைப் பொருத்தது.
வாழ்க்கையின் அர்த்தங்கள் எது வாழ்க்கை???
வாழ்ந்தவர்களின் வாழ்க்கையை சரித்திரத்தை பார்ப்போம்
ஒரு பதிவில் படித்தது மிகவும் எனக்கு பிடித்தது பதிவு செய்த அந்த முதல் நபருக்கு எனது நன்றிகள். கிளியோபாட்ராவின்கல்லறை வாசகம் உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது நல்லவேளை இவளின் பிணமானாள், இல்லாவிட்டால் இந்த கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்.
மகா அலெக்ஸாண்டரின் கல்லறை வாசகங்கள்
இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு இந்த கல்லறை கூட போதுமானதாக ஆகிவிட்டது.ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம் இங்கே புதைகுழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்.அரசியல்வாதியின் கல்லறை வாசகம் தயவு செய்து கை தட்டி விடாதீர்கள் இவன் எழுந்து விடக்கூடாது .
ஒரு விலைமகளின் கல்லறை வாசகம்
இங்கு தான் இவள் தனியாக தூங்குகிறார் தொந்தரவு செய்யாதீர்கள் பாவம் இனி வர முடியாது இவளாள்.
இவ்வளவு தான் வாழ்க்கை .
ஆமாம் அதில் என்ன சந்தேகம் வாழ்ந்தவர்கள் சரித்திரம் சொன்ன கதை இதுதான். ஆனால் அவர்களின் ஆட்டம் எல்லாம் அடங்கி போனது தெரியாமல் இந்த உலகையே நடுங்க வைத்த ஹிட்டலரும் தன் சாவை கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப் போனான்.
அவனுடன் கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செருப்பால் அந்த பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். அந்த அளவுக்கு மக்களால் வெறுக்கப்பட்டான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனவக்கார்கள் அடங்கிப்போன கதைகளில் இதுவும் ஒரு கதையாக நீங்கள் உணர வேண்டும். நாம் எதை ஆதாரமாகக் வைத்துக் ஆணவப்படுகிறோம்??? சற்று யோசனை செய்யவும்
நமது பதவியா.
நாம் சேர்த்து வைத்த சொத்து சுகங்களா
நமது படிப்பா
நமது வீடா.
நம் முன்னோர்களின் ஆஸ்தியா
நமது அறிவா
நமது பிள்ளைகளா
எது நம்மை காப்பாற்ற போகிறது ???
ரத்தம் சூடாகி நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மைக் காப்பாற்றப் போவதில்லை. பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்குஉடை கொடுத்து எல்லோரையும் நேசித்து அன்புடன் மனத்தூய்மையுடன் வாய்மையுடன் வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றென்றும் மற்றவர் மனதில் வாழ்வார்கள் என்பது சில சரித்திர கதைகள் நமக்கு அறிவு ஊட்டுகிறது . சுயநலம் கொண்டு தமது வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நாம் காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஒருமுறை பிறக்கின்றோம் ஒருமுறை வாழப்போகிறோம் நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப் போகிறோம்.
அதை நாம் உணர வேண்டும் நல்ல செயல்களை நல்ல எண்ணங்களை மகிழ்ச்சியோடு விதைப்போம் அளவில்லா மகிழ்ச்சியுடன் அறுவடை செய்வோம். நன்மைகளை ஆயிர படங்களாக மாற்ற முயற்சி செய்வோம் பிறரை வாழ வைத்து வாழ்ந்து பார்க்கும் சுகம்தான் தனி சுகம் அந்த சுகத்தை காண நல்ல பண்புகளை வளர்ப்பது நமது கடமை.வாழ்க்கையில் சுகமும் துக்கமும் கலந்து வருவது தான் வாழ்க்கை .அதை எதிர்நோக்கிய நாம் செயல் பட வேண்டும். சுகமும் துக்கமும் இல்லாதது ஒரு வாழ்க்கையாக இருக்காது சுகம் வரும் போது நாம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறமோ , அதேபோல் தூக்கம் வரும் பொழுது அதற்கான காரணங்களை கண்டு அதற்கான மாற்று தீர்வுகளையும் நாம் செய்ய வேண்டியது நமது கடமை. அதிலிருந்து வெளியாகி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக நம்மிடம் ஒரு நம்மிடம் ஒரு 500 ரூபாய்க்கான நாணயங்கள் இருக்கின்றது வைத்துக்கொள்வோம் அந்த நாணயங்கள் நமக்கு ஒரு கனமான, வலுவான பொருளாக தெரியும். அதுவே அதே 500 ரூபாய் ஒரு தாளாக இருக்கிறது என்றால் அதற்கு கணம் கிடையாது.ஆனால் மதிப்பு என்பது இரண்டுக்கும் ஒன்றுதான். 500 ரூபாய் காசுக்காக இருந்தாலும் 500 ரூபாய் நோட்டாக இருந்தாலும் மதிப்பு ஒன்றுதான். அது போலத்தான் வாழ்க்கையில் சுகமும், துக்கமும் ஒன்று. இதனை கருத்தில் கொண்டு வாழ்க்கையின் மதிப்பை சம பங்காக மதிப்பீட்டு வாழ கற்றுக் கொள் வேண்டும். இதுவே வாழ்க்கையின் மேன்மைக்கு மிகவும் நல்லது.
வாழ்க்கையில் மனிதர்களின் மதிப்பும் மரியாதையும் ஒரு சிறிய கதை .
ஒரு நான்கு வழிப்போக்கர்கள் வெய்யிலின் தாகத்திற்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கி நிழலாடிக் கொண்டிருக்கின்றார்கள் .அந்த சமயத்தில் மரத்திலிருந்து ஒரு கிளி பேசுகிறது இது கதைதான் கற்பனையாக எடுத்துக்கொள்ளவேண்டும். கிளி கேட்கிறது மனிதர்களே .. என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.முதல் கேள்வியை, மனிதனுக்கு மரியாதைக்கும் எப்படி உண்டாகிறது. மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும் எப்படி உண்டாகிறது?எதனா மதிப்பு மரியாதை இருக்கும் இடம்எது?மதிப்பும் மரியாதையும் எதனால் உண்டாகிறது?கிளி இந்த 3 கேள்வி யை கேட்டவுடன், கேள்வி கேட்டவுடன் கேள்விக்கு பதில் கூற முடியாமல் இந்த 4 பேரும் முழித்தனர். மனிதனுக்கு மதிப்பு மரியாதை எப்படி உருவாகிறது பற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது ஒரு பெரிய சர்ச்சையாக உருவாகி அது சண்டையாக ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்.இந்த சூழலில் அந்த வாக்குவாதம் மிகவும் கடுமையாக போகின்ற காலகட்டத்தில் அந்த வழியாக வந்த ஒரு துறவி அங்கிருந்து ஆலமரத்தடியில் நான்கு பெருத்த குரலில் பேசிக் கொள்வதைக் கண்டு அவர்களை நோக்கி சென்றார் .அந்த துறவி என்னப்பா உங்களுடைய பிரச்சனை என்று கேட்டுக்கொண்டே அவர்கள்அருகில் சென்றார். துறவியை வணங்கி சாமி உங்களுக்கு தான் நிறைய விஷயங்கள் தெரியுமே அதாவது அதாவது எங்களுடைய சந்தேகம் என்னவென்றால் ,ஒரு மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும் எப்படி வருகிறது? இதற்காகத்தான் நாங்கள் வாதாடி கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு ஒரு விடை கிடைக்கவில்லை நீங்கள் சொல்லுங்கள் சாமி அவர்களே என்று அந்தத் துறவியை கேட்டார்கள்.அதற்கு துறவி சற்று அமருங்கள் உங்களுக்கு கேள்விக்கான சரியான பதிலை நான் கூறுகிறேன் என்று ஒரு சிறிய உதாரணம் சொல்ல ஒரு கதையை தொடங்கினார்.
மகுடபதி என்னும் தேசத்தை மகேஷ் பூபதிஎன்னும் மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனது அமைச்சரவையில் தலைமை அமைச்சராக மதியூகி என்பவன் இருந்து வந்தான் அவனுக்கு வயது என்பதே தாண்டிவிட்டது மதியூகிக்கு ஒரு மகன் இருந்தான் .அவன் பெயர் மகிபாலன். தன்னைப்போலவே அவனை அமைச்சர் பதவிகள் கொடுத்து அழகு பார்க்க விரும்பிய மதியழகி தந்தை, மகனுக்கு செய்ய வேண்டிய கடமை அதுதானே அதற்காக அவர்மன்னரை சந்தித்து அந்த பதவிக்கான விண்ணப்பத்தை மன்னரிடம் அளித்தார் தலைமை அமைச்சர் கூறியது பற்றி ஒரு கணம் யோசித்த, மன்னன் சரி பார்க்கலாம் வாருங்கள் என்று கூறி தலைமை அமைச்சரை அனுப்பி வைத்துவிட்டார். மன்னர் தனது வேண்டுகோளை ஏற்பார் என்ற நம்பிக்கையோடு இருந்த தந்தையருக்கு ஓரிரு நாட்கள் கழித்து அவர் எதிர்பார்த்தபடியே மன்னன் அழைப்பு விட்டார்.மன்னர் அவருடைய மகனுக்கு அவருடைய தந்தையின் பதவியை வழங்கினார். நாட்கள் நகர்ந்தன இனி தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமைகள் எனக்கு வந்துவிட்டது .மகிபாலன் தலைமை அமைச்சர் ஆகிவிட்டான் பதவியில் அமர்ந்த சில நாட்களிலேயே அவரது செயல், தவறான நடவடிக்கை ,மக்கள் மீது போடும்வீண் பழிகள் மக்களிடத்தில் விரோத போக்கான சம்பவங்களை அரங்கேற்றினார் மக்களிடத்தில் அவருக்கு இந்த நல்ல பெயர் கிடைக்கவில்லை.காரணம் அனைவரும் மனவருத்தமும் துண்பங்களும் வாட்டி வதைத்தது. தந்தையின் குணத்திற்கும் நேர்மாறாக மாறிவிட்டது அவனுடைய செயள்..ஒரு காலகட்டத்தில் தந்தையார் நாட்டு மக்களை அருமையான முறையில் வழி நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் மகனோ இதற்கு எதிர் மாறாக அவருடைய பதவியில் அமர்ந்த சில நாட்களிலேயே அதிகார போதையில் பல தவறுகளை செய்து தலைகால் புரியாமல் தன்னுடைய பதவியை வைத்துக்கொண்டு பல இன்னல்களை மக்களுக்கு அளித்தார். மக்கள் மனதார அவரை ஏற்றுக்கொள்ளவில்ல. இதனால் மக்கள் ஒரு காலகட்டத்தில் இந்த செய்தியை மன்னர் இடத்தில் கூறினார்கள்.அரசருக்கு பொறுக்க முடியாத கோபம் உடனே அரசவையை கூட்டி அந்த அமைச்சர் மகிபாலன் பதவியை ரத்து செய்ய உத்தரவிட்டு விட்டார். மகிபாலனுக்கு பதவி போய்விட்டது ஒரு நல்ல அந்தஸ்தும் போகிவிட்டது மன உளைச்சலில் அவன் வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்தவுடன் தந்தையிடம் தனது பதவி பறிபோனது பற்றி விளக்கிக் கூறினான், உடனே தந்தை சரி நடந்தது நடந்து ஆகிவிட்டது மன நிம்மதிக்காக நாம் கோவிலுக்கு சென்று வருவோம் என்று அழைத்து , அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக இருவரும் புறப்பட்டு அந்த வீதியாக நடந்து கொண்டு வருகிறார்கள். அந்த வேளையில் அந்த தெருவில் குடியிருக்கும் மக்கள் இவர்களை பார்த்து முகம் சுளிக்கிற மாதிரி முகத்தை திருப்பி கொள்கிறார்கள்,சிலர் சிலர் கடுமையான வார்த்தைகளால் மகிபாலனை பேசுகிறார்கள்.ஒரு அர்த்தமற்ற அமைச்சராக இருந்ததை சுட்டிக்காட்டி கடுமையான வார்த்தைகளால் பேசுகிறார்கள் .ஆனால் அவருடைய தந்தையார் பற்றி ஒருவரும் தரை குறை கூறவாக பேசவில்லை. அவருக்கு மட்டும் தனியாக மரியாதை செலுத்துகிறார்கள் வணக்கம் செலுத்துகிறார்கள் விசாரிக்கிறார்கள். மகிபாலனுக்கு ஒன்றும் புரியவில்லை தலை குனிந்து மக்களை பார்க்க அச்சபட்டான்.ஆனால் அவனுக்கு அந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கவில்லை. இவனுக்கு ஒரே ஆச்சர்யம் தந்தையாருக்கு மட்டும் மரியாதை மதிப்பு எப்படி கிடைக்கிறது என்று. நடந்துகொண்டிருக்கும் வேளையில் பிறகு தந்தையை நோக்கி கேட்கின்றான் , அப்பா உங்களுக்கு இந்த மக்கள் நீங்கள்பதிவிலேயே இல்லாதபோது உங்களுக்கு இவ்வளவு மரியாதை தருகிறார்கள் பதிவிலிருந்து நான் விலகிய உடனே எனக்கு இப்படிப் பேசுகிறார்களே அதற்கு என்ன காரணம் நீங்கள் பதவி இல்லாத போதும் இந்த மரியாதையை , மதிப்பும் எப்படி கிடைக்கிறது ? அதற்கு தந்தையார் தந்தையார் சிரித்தபடியே இருக்கு நிதானமாக பதில் கூறுகிறார் .அவர் கூறியது ,அவனுக்கு கேள்விக்கு பதிலாக மட்டுமில்லாமல் அவனுக்கு ஒரு அறிவுரையாகும் இருந்தது. அவர் கூறியது இதுதான். தற்பொழுது நீயும் நானும் தலைமை அமைச்சராக இல்லை. ஆனால் நம்மிடம் செல்வமும் கல்வியும் வீரமும் சேர்ந்து கிடைக்கிறது. இருப்பினும் இந்நிலையில் உன்னை விட்டு விட்டு மக்கள் என்னை மட்டும் மதிக்க காரணம் என்ன?அன்றும் சரி இன்றும் சரி நான் நல்ல பண்புள்ள மனிதனாகவே நடந்து கொள்கிறேன் அதனால்தான் இந்த மரியாதையும் மதிப்பும் எல்லாமே இன்றும் வரை நிலைத்து நிற்கிறது என்று அவனிடம் கூறினார். இவ்வாறு இதே கதையை முடித்தார் அந்தத் துறவி. வழிப்போக்கர்கள் நல்ல சிந்தனைத் தெளிவுடன் விடைபெற்று அந்தக் கிளிக்கு நல்லதொரு கருத்தான பதிலை கூறினார்கள்.அப்போது கிளி கூறியது மனிதர்களே!எப்போதும் புரிகிறதா இனியாவது நீங்கள் மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள்.எனவே மனிதனுக்கு மதிப்பும் மரியாதையும் வருவது அவர்கள் வாழ்க்கையில் சக மனிதர்களிடம் அன்பு செலுத்தி நற்பண்புகளுடன் நடந்து கொண்டால் , அனைத்தும் நல்லதாக வே நடக்கும்.இதுவே இந்த கதையின் மூலம நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
சிரவனம்:
நல்ல பயனுள்ள செய்திகளை ,கருத்துள்ள சொற்பொழிவுகளை கேட்பது.அறிவு பூர்வமான செய்திகளை கேட்பது.
பெரியோரை துணை கோடல்:
உடன்பாட்டு சிந்தனை உடையவர்கள் உடன் நட்பு கொண்டு அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிகவும்நல்லது.
ஒவ்வொரு தனி பெரிய மனிதர்களின் வாழ்க்கை அனுபவம் வேறுபட்டது அவர்களது நல்ல பண்புள்ள அனுபவங்களை பகிர்ந்துகொள்வதில் தவறில்லை.
புத்தகங்கள் படிப்பது:
நல்ல பயனுள்ள அறிவாற்றள் புத்தகங்கள் படிப்பது நல்லது.இன்றைய உலக நிகழ்வுகள் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பதுநல்லது.அறிவு திறன் மேம்பாட்டு கொண்ட புத்தகங்கள் படிப்பது நல்லது.
செயல்படுத்தல்:
பண்பு நலன்களை அன்றாடம் செயல்பாடுகளில் பயன் படுத்துதல் வாழ்க்கை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
பண்பு நலன்களை எப்படி கட்டமைப்பது?
1. இடை பண்பு நலன்கள்..
2. இறுதி பண்பு நலன்கள்
வாழ்க்கையில் நல்ல நோக்கத்தை அடைவதற்கு இந்த இரு பண்பு நலன்களையும் தெரிந்து கொள்வது அவசியம்.இந்த இரண்டும் பூட்டு, சாவி போன்றது.இந்த இரண்டும் சேர்ந்து பயன்படுத்த வேண்டும் அப்போது தான் இதன் செயல்பாடு முழுமை பெறும்.
இடை பண்பு நலன்கள்
நமது இடை பண்புகள் சித்தாந்தங்களை தேடுவதாக அமையாமல் பணம் , பொருள் , போன்றவற்றை தேடுவதாக அமைந்து விட்டது என்பது தான் சோகம்.இறுதி பண்பு நலன்கள் பெரும்பான்மையருக்கு மணநிறைவு மற்றும் மகிழ்ச்சி என்ற இரண்டு தான். ஆனால் இடை பண்பு நலன்களில் பல வேறுபாடுகள் உள்ளன என்பது உண்மை.அவை தார்மீக கொள்கைளாகவோ சமுதாயம் ஏற்று கொள்ளகூடிய தந்நிலையாகவோ இல்லாமல் அவரவர் நம்பிக்கையையும் விருப்பங்களை பொறுத்து அமைகிறது.
இறுதி பண்பு நலன்கள்:
இறுதி பண்பு நலன்கள் என்பது ஒவ்வொருக்கும் ஏற்படும் மன நிறைவு தான்.தவறை சரியாக செய்தவர்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்... நல்லதை தவறாக செய்தவர்கள் தலைகுனிந்து நடக்கிறார்கள்...அனுபவம் சிலருக்கு மகிழ்ச்சியை தரும் சிலருக்கு வலிகளையும் தரும் மகிழ்ச்சியான அனுபவத்தை மனதில் வைங்கள். வலிகள் நிறைந்த அனுபவத்தை நீங்கள் வாழ்வில் முன்னேறும் ஏணி படிக்கல்லாக வைங்கள்..வெற்றி எதிர்ப்பார்த்த நேரத்தில் கிடைக்காது, அது போலத் தான் தோல்வியும் திட்டமிட்டது போலவே நிகழாது.
வாழ்க்கை பல ஆச்சர்யம் நிறைந்த பயணம் அதில் எது வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்பது சிறப்பு.
பழம் பெரும் ஞானிகள், ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்தாலும் கூட... உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட அனுபவங்களே உங்களை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது. பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை... ஆனால், இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வாழ்க்கை.
நம்பிக்கை என்ற சிறு நூலிழையில் தான்.. அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது..!!என் வாழ்க்கையும் தான். பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட... காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் பாசம் அதிகம்..!! உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தால் போதும்..!மற்றவர்களிடம் அதை நிரூபிக்க வேண்டியதில்லை..!!
தவறை சரியாக செய்தவர்கள் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்... நல்லதை தவறாக செய்தவர்கள் தலைகுனிந்து நடக்கிறார்கள்...அனுபவம் சிலருக்கு மகிழ்ச்சியை தரும் சிலருக்கு வலிகளையும் தரும் மகிழ்ச்சியான அனுபவத்தை மனதில் வைங்கள். வலிகள் நிறைந்த அனுபவத்தை நீங்கள் வாழ்வில் முன்னேறும் ஏணி படிக்கல்லாக வைங்கள்..வெற்றி எதிர்ப்பார்த்த நேரத்தில் கிடைக்காது, அது போலத் தான் தோல்வியும் திட்டமிட்டது போலவே நிகழாது.வாழ்க்கை பல ஆச்சர்யம் நிறைந்த பயணம் அதில் எது வந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்பது சிறப்பு. பழம் பெரும் ஞானிகள், ஆசான்களிடம் சரியாக கற்று தேர்ந்தாலும் கூட... உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட அனுபவங்களே உங்களை ஒரு சிறந்த மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது.பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை... ஆனால், இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வாழ்க்கை நம்பிக்கை என்ற சிறு நூலிழையில் தான்.. அனைவரின் அன்பும் இயங்கிக் கொண்டிருக்கிறது..!!என் வாழ்க்கையும் தான். பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட... காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் பாசம் அதிகம்..!!உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தால் போதும்..!மற்றவர்களிடம் அதை நிரூபிக்க வேண்டியதில்லை..!!


Comments